கரூர்
கடையின் பூட்டை உடைத்து இரும்பு பொருட்களை கொள்ளை
|கரூர் அருகே கடையின் பூட்டை உடைத்து இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இரும்பு பொருட்கள் கொள்ளை
கரூர் தாந்தோணிமலை அருகே உள்ள கம்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 43). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கரூர் காயத்ரி நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டாா். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் உள்ளே இருந்த இரும்பு ெபாருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கு விரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளும் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.