< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
|10 Oct 2023 3:02 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டுபோனது.
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பழனியப்பா நகரை சேர்ந்தவர் அர்ஜூன் (44). இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்த உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.