< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
|14 July 2022 2:00 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டுபோனது.
லால்குடி:
லால்குடிைய அடுத்த செம்பரை மாரியம்மன் கோவில் நடுத்தெருவில் வசிப்பவர் தனபால். இவரது மனைவி மாலதி(வயது 40). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இவர் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 8 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.