சேலம்
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
|கருப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கருப்பூர்:
கருப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ரூ.2 லட்சம் கொள்ளை
சேலம் கருப்பூர் 1-வது வார்டு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 40). இவர், தண்ணிதொட்டி பகுதியில் பொக்லைன் எந்திரம் பழுது பார்க்கும் சர்வீஸ் பட்டறை வைத்துள்ளார். அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு பழைய வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புதிய வீட்டுக்கு தூங்க சென்றுள்ளார்.
நேற்று காலையில் பழைய வீட்டுக்கு வந்த சின்னதம்பி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம் கொள்ளை போய் இருந்தது. தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மர்மநபர்கள் கைவரிசை
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை போன வீட்டு கதவு, பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சின்னதம்பி குடும்பத்துடன் புதிய வீட்டுக்கு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது பழைய வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து கைவரிசை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.