< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் திருட்டு
திருச்சி
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் திருட்டு

தினத்தந்தி
|
26 Dec 2022 1:37 AM IST

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

துறையூர்:

கதவு திறந்து கிடந்தது

துறையூரை அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு வயல் வேலைக்கு சென்றார்.

பின்னர் மாலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக உள்ளே சென்று பார்த்தார்.

திருட்டு

அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோவின் கதவுகள் திறக்கப்பட்டு, லாக்கரில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், 80 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கஸ்தூரி கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்