< Back
மாநில செய்திகள்
கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நீலகிரி
மாநில செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

தினத்தந்தி
|
23 Oct 2023 12:30 AM IST

அய்யன்கொல்லி அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணம் திருடிய ஒருவர் சிக்கினார்.


பந்தலூர் அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லியில் சென்ட்மேரீஸ் யாக்கோபிட் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆலயகமிட்டி தலைவர் பேபி சேரம்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், முருகேசன், தினேஸ்குமார், போலீஸ் ஏட்டு ராமு மற்றும் போலீசார் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது பந்தலூரிலிருந்து பாலகாடுக்கு மோட்டார்சைக்கிளில் தப்பமுயன்ற ஆசாமியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளமாநிலம் பாலக்காட்டை சேர்ந்த கிரீஸ் (வயது 43) என்பதும், கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்