< Back
மாநில செய்திகள்
கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல்
திருப்பூர்
மாநில செய்திகள்

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல்

தினத்தந்தி
|
17 Jan 2023 11:09 AM GMT

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல்

பல்லடம்

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல வகையான காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர் இந்த நிலையில் தற்போது கத்தரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் கத்தரிக்காய் விவசாயம் செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இது குறித்து சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-

கத்தரிக்காய் விவசாயத்தில் ஏக்கருக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் கத்தரிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கிடைத்தது. இந்த நிலையில் தற்போது கிலோ ரூ.10-க்கு தான் விற்பனையாகிறது. இதற்கிடையே கத்தரிக்காய் செடிகளில், நோய் தாக்குதல் ஏற்பட்டு, செடிகளிலேயே காய்கள் கருகி விடுகின்றன. எந்த வகையான நோய் தாக்குதல் என தெரியவில்லை. இதனால் சுமார் 3 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காயை அழிப்பதை தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்