< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காலையில் கொளுத்திய வெயில்... மாலையில் வெளுத்த மழை - சென்னை வாசிகள் குஷி
|10 Jun 2023 7:40 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று மாலை 5 மணியிலிருந்து குளிர்ந்த காற்று வீசி பலத்த மழை பெய்து வருகிறது.
கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.