< Back
மாநில செய்திகள்
அரளி விதையை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அரளி விதையை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை

தினத்தந்தி
|
13 Sept 2023 12:43 AM IST

அரிமளம் அருகே அரளி விதையை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே தெற்கு பொன்னம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சரவணன் (வயது 29). இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த சரவணன் மது போதையில் அரளி விதையை (விஷம்) தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்