மதுரை
திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
|திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
உசிலம்பட்டி,
திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுப்பெண்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பட்டறை தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 26). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், கீழப்புதூரைச் சேர்ந்த கோபிகா (22) என்பவருக்கும் கடந்த மாதம் 1-ந் தேதி திருமணம் நடந்தது.
தற்கொலை
தற்போது உசிலம்பட்டியில் உள்ள பட்டறை தெருவில் உள்ள வீட்டில் புதுமண தம்பதியினர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பிரேம்குமார் வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண் கோபிகா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கோபிகா உடலை பரிசோனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆன 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.