< Back
மாநில செய்திகள்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
நீலகிரி
மாநில செய்திகள்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
29 Sept 2023 12:15 AM IST

கோத்தகிரி அருகே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கோத்தகிரி

கோடநாடு சிவகாமி எஸ்டேட் நிர்வாகம், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, திருப்பூர் மேற்கு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கங்கள் சார்பில், மகளிருக்கான மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை முகாம் கோத்தகிரி அருகே கோடநாடு சிவகாமி எஸ்டேட் வளாகத்தில் நடைபெற்றது. முகாமை சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் தொடங்கி வைத்து பேசினார். தலைவர் சுரேந்திரன், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹில் திட்ட ஆலோசனை டாக்டர் நிர்மலா சபரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான காரணங்கள், வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம், ஆனந்தராம், பிரேம் ஆனந்த், கவிதா சுந்தர்ராஜன், பாபு, மணிகண்டன் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்