< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
கோவில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருட்டு
|16 Aug 2022 2:39 AM IST
கோவில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருட்டுபோனது.
திருவெறும்பூர்:
திருவெறும்பூரை அடுத்த கிளியூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு குதிரை அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு திருச்சி, தஞ்சை, கரூர், மாயவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆடி மாதத்தில் வந்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தபோது, கோவிலின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு மூலஸ்தானத்தில் இருந்த பித்தளை பொருட்கள் திருட்டுபோயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கிராம பட்டையார்கள் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட திருவெறும்பூர் போலீசார், திருட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.