< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
|22 March 2023 11:52 PM IST
வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு போனது.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 40). ஆளில்லா நேரம் பார்த்து இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை திருடி சென்றனர். இதேபோல் நல்லூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த பிரபாகரன்(32) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.