< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு
|30 Jun 2023 1:07 AM IST
ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு
வையம்பட்டி:
வையம்பட்டியை அடுத்த கல்பட்டி பகுதியில் மணிகண்ட பிரபு(வயது 27) என்பவர் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ந் தேதி கடையை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கேமரா, பென் டிரைவ், ரூ.1 லட்சம் மற்றும் பொருட்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் வையம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.