< Back
மாநில செய்திகள்
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தினத்தந்தி
|
21 Jun 2022 1:04 PM IST

படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் அம்மாணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 35). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தூத்துகுடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் குமரேசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமரேசனிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலையடுத்து நேற்று வீடு திரும்பிய குமரேசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கபட்டிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்