< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
சுங்குவார்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
|23 Jun 2022 2:40 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் மோகன் (வயது 70). இவரது மனைவி புஷ்பா (60).
மோகன் தன்னுடைய வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மோகன் திடீரென எழுந்து பார்த்தபோது அறையில் துணிகள் மற்றும் பாத்திரங்கள் கலைந்து காணப்பட்டது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இது தொடர்பாக மோகன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.