சென்னை
திருவொற்றியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
|திருவொற்றியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தா தெருவில் வாசித்து வருபவர் பானுமதி. கணவர் இறந்து விட்டதால் பானுமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த வள்ளி என்பவர் பானுமதியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ.3½ லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.