< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
|9 March 2023 12:15 AM IST
செஞ்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கோட்டிக்கல்பாறை பகுதியை சேர்ந்தவர் பழனி மனைவி கற்பகம்(வயது 41). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர் மறுநாள் காலையில் வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1½ பவுன் நகையை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டது தொியவந்தது.
இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கற்பகம் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.