< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
சென்னை
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தினத்தந்தி
|
23 Aug 2022 5:24 PM IST

திருவொற்றியூரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றனர்.

திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத். தனியார் கம்பெனி ஊழியரான இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9½ பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்