< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தினத்தந்தி
|
4 Aug 2022 2:35 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சித்தாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கனகா (வயது 68). நேற்று முன்தினம் இவரது மகன் சக்திவேல் மனைவியை பார்ப்பதற்காக குன்றத்தூர் சென்றுவிட்டார். கனகா வீட்டுக்கு வெளியே கிரில் கேட்டை பூட்டிவிட்டு வயலுக்கு மாட்டை ஓட்டி சென்றார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கிரில் கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் தனது மகன் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தார்.

வீட்டுக்கு திரும்பி வந்த சக்திவேல் இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்