< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ஈரோடு
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தினத்தந்தி
|
2 July 2022 10:21 PM IST

பூட்டை உடைத்து நகை திருட்டு

கோபி அருகே உள்ள உக்கரம் சாணார்பாளையத்தை சேர்ந்தவர் விமல் (வயது 36). இவர் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி. இவர் வெளியூர் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி விமல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்து திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டின் உள்ளே சென்று பீரோவை பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 4 கிராம் தங்க சங்கிலியை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பூட்டை உடைத்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்