< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை
|3 Jun 2022 11:53 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
காரிமங்கலம்:
காரிமங்கலத்தை அடுத்த திண்டல் பஞ்சாயத்து தெல்லனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரி அம்மாள் (வயது 62). இவர் தனது வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று கதிரி அம்மாள் தன்னுயைட உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வந்த போது, அவரது வீட்டில் இருந்து 3 பேர் ஓடினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கதிரி அம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.50 ஆயிரம் ஆகியன கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.