< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
|29 Jun 2022 1:27 PM IST
மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
மீஞ்சூர் அருகே நாலூர் இந்துஜா நகரில் வசிப்பவர் ஷேக் அப்துல்லா (வயது 40). இவர் மணலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது தாய் திருவள்ளூர் மணவாள நகரில் மரணமடைந்த நிலையில் அவரது 16 நாள் காரியத்திற்கு தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
காரியம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீட்டுக்கு வந்த போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.