< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|2 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த வி. மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராசு(வயது 50). இவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். தேவராசு நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து தேவராசு கொடுத்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.