< Back
மாநில செய்திகள்
நாட்டுக்கே வழிகாட்டும் காலை உணவுத் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மாநில செய்திகள்

நாட்டுக்கே வழிகாட்டும் காலை உணவுத் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தினத்தந்தி
|
20 Sept 2023 8:33 PM IST

காலை உணவுத் திட்டம் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைகிறார்கள்.

பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் மாணவர்கள் வருவதால் கல்வி கற்பதில் ஏற்படும் சிரமங்கள், பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல் போன்ற காரணத்திற்காக இத்திட்டம் செயல்படுத்துவதால் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோவுடன் தகவல் பகிர்ந்துள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்த விடியோவில்,

அதிகாலை 3 மணி முதல் காலை உணவு தயாரிக்கும் பணியானது தொடங்குவதாகவும், ஒவ்வொரு செயல்பாட்டையும் அதிகாரிகள் கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், காலை உணவுத் திட்டத்தை சிஎம் பிஎப்எஸ் செயலி மூலம் அனைத்தும் பதிவு செய்யப்படுவதாகவும் ஒவ்வொரு நாளும் பொங்கல், கிச்சடி, சாம்பார் சாதம் என மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதாகவும் இதனால், மாணவர்களிடையே கற்றல் ஆர்வம் அதிகரித்திருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்