< Back
மாநில செய்திகள்
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி நன்றி
மாநில செய்திகள்

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி நன்றி

தினத்தந்தி
|
16 Sept 2022 4:54 PM IST

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணாவின் 114 -ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பான சாதனைத் திருவிழாவாக ஆக்கிக் கொண்டாட வைத்துள்ளார். அரசு பள்ளிகளில் காலையில் 'இளங்குருத்துகள்' தொடக்கப் பள்ளிகளில் (ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) சிற்றுண்டி சாப்பிட வசதியில்லாததாலோ அல்லது வாய்பில்லாததாலோ அல்லது வேறு காரணங்களாலோ பசியோடு வகுப்பறைகளுக்குச் சென்று, பாடங்களில் கவனம் செலுத்த இயலாத சூழல் - கருகிய மொட்டுகளாகி விடும் நிலை கண்கூடு.

தற்போது ஏற்பட்டு, திக்கெட்டும் தமது சாதனைகளால் சரித்திரம் படைக்கும் நமது 'திராவிட மாடல்' ஆட்சியின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனைச் சரியாக உணர்ந்து ஆரம்பப் பள்ளிகளில் நல்ல தூய்மையும், பான்மையும் கூடிய காலைச் சிற்றுண்டியையும் அக்குழந்தைகளுக்கு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 'திராவிட மாடல்' ஆட்சியின் மணிமகுடத்தில் மேலும் ஓர் ஒளிமுத்தைப் பதித்துள்ளார்.

இந்தியாவிற்கே வழிகாட்டும் அருமையான கல்விக் கண்ணொளி பரப்பும் பசியாறும் திட்டம், தொடரட்டும். முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்