ராணிப்பேட்டை
பாண்டியநல்லூர் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்
|பாண்டியநல்லூர் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சோளிங்கர்
பாண்டியநல்லூர் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் ஆதி திராவிட ஆரம்பப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க விழா ஊராட்சி தலைவர் கல்யாணிரகுராம்ராஜூ தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா, காங்கிரஸ் நகரத் தலைவர் டி.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அனைவரையும் தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சமையல் கூட அறையை திறந்து வைத்து திட்டத்தையும் தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
முடிவில் பாண்டியநல்லூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஹரி நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் தமிழ்செல்விஅசோகன், துணைத் தலைவர் பழனி நகராட்சி உறுப்பினர்கள், கோபால், சிவானந்தம், அன்பரசு, சுசிலா, பொறியாளர் ஆசிர்வாதம் மேற்பார்வையாளர் ஆனந்தன், மற்றும் முன்னாள் துணைத் தலைவர் ஜெயவேலு, மற்றும் ஏ.எஸ்.ராஜா, மகேஷ்.ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூடலூர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். வாங்கூரில் அரசு தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினார்.