< Back
மாநில செய்திகள்
குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை
மாநில செய்திகள்

குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் பெரியகருப்பன்

தினத்தந்தி
|
17 Sept 2022 12:15 AM IST

மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

எஸ்.புதூர்,

மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

காலை உணவு திட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தினை நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எஸ்.புதூர் ஒன்றியம், முசுண்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலர் அமுதா, மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாணவர்களுடன் அமர்ந்து

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலை வகித்து எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 47 தொடக்கப்பள்ளிகளில் உள்ள 2,812 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை குழந்தைகளுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்.

மேலும் மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி, அரசு முதன்மை செயலர் அமுதா, மகளிர் மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி ஆகியோர் உணவை சாப்பிட்டனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வானதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சிவராணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சாந்தி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி, சிங்கம்புணரி தாசில்தார் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, அங்கயற்கண்ணி, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி செல்வராஜ், ஊராட்சி தலைவர் அடைக்கலசாமி, துணை தலைவர் சின்னதுரை மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்