< Back
மாநில செய்திகள்
காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு

தினத்தந்தி
|
5 April 2023 12:30 AM IST

வேடசந்தூரில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ப்படுகிறது. நேற்று காலையில் வேடசந்தூர் கோகுல்நகர் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமான தண்ணீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கோகுல்நகர் பகுதியில் தமிழரசி என்பவருடைய வீட்டுக்குள் குடிநீருடன் கழிவுநீரும் சேர்ந்து புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்