< Back
மாநில செய்திகள்
கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு
தேனி
மாநில செய்திகள்

கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு

தினத்தந்தி
|
29 Oct 2022 12:15 AM IST

கூடலூர் அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக லோயர்கேம்பில், குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் கீழ்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகர பகுதிக்கு செல்லும் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது வரை அந்த குழாய் உடைப்பு சரி செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் வீணாகி செல்கிறது. எனவே குடிநீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்