< Back
மாநில செய்திகள்
ஆவின் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
மாநில செய்திகள்

ஆவின் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
25 Jun 2022 10:53 AM IST

கருங்கல் பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழியை சேர்ந்தவர் குளோரி(வயது 46). இவர் கருங்கல் பஸ் நிலையத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றார்.

நேற்று இரவு இவர் வியாபாரம் முடிந்து தனது கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலையில் கடை உரிமையாளர் குளோரி கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடையினுள் சென்று பார்த்தைபோது அங்கு அவர் வைத்துவிட்டு சென்றிருந்த பணம் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளர் குளோரி கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்