< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கிளை அஞ்சலக அலுவலர் பணியிடங்கள்
|22 Aug 2023 12:26 AM IST
கிளை அஞ்சலக அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய அஞ்சல் துறையில் கிளை அஞ்சலக அலுவலர் மற்றும் உதவி கிளை அஞ்சலக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியாகும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை அஞ்சல் துறை இணையதள முகவரியில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.