< Back
மாநில செய்திகள்
அழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

அழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்

தினத்தந்தி
|
1 Aug 2023 12:15 AM IST

செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினமும் மூலவருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வகையான வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். இதில் சிறப்பு நிகழ்ச்சியாக 5-வது நாள் வெள்ளி கருடவாகனத்திலும், 7-வது நாள் வெள்ளைப்பூ சாத்தியும் வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக 10-வது நாளான நேற்று காலை 9.10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மேலும் செய்திகள்