< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
உடன்குடி அருகே பிரம்மசக்தி அம்மன் கோவில் கொடை விழா...!
|9 Jun 2022 2:56 PM IST
உடன்குடி அருகே பெருமாள்புரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் கொடை விழா விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் கொடை விழாவின் நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர், நன்பகல் மற்றும் நடு இரவு நேரங்களில் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.
விழாவின் போது மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.