< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கழிவறை துளையில் சிக்கிய சிறுவனின் கால் - 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு
|11 Feb 2024 11:35 AM IST
கழிவறையில் பீங்கான் துளையில் கால் சிக்கி பரிதவித்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் 4 வயது சிறுவன் வீட்டின் கழிவறைக்கு குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் சிறுவனின் கால் கழிவறையின் பீங்கான் துளைக்குள் சிக்கியது. காலை வெளியே எடுக்க முடியாததால் சிறுவன் கூச்சலிட்டுள்ளான்.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் காலை வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், முடியாமல் போனதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினர், 4 மணி நேரம் போராடி பீங்கானை முழுமையாக உடைத்து காலுக்கு சிறு காயம் கூட ஏற்படாமல் பத்திரமாக மீட்டனர்.