< Back
மாநில செய்திகள்
சிறுவன் விஷம் வைத்து கொல்லப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி ஆட்சியரிடம் பெற்றோர் மனு
மாநில செய்திகள்

சிறுவன் விஷம் வைத்து கொல்லப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி ஆட்சியரிடம் பெற்றோர் மனு

தினத்தந்தி
|
9 Sept 2022 1:02 PM IST

சிபிஐ விசாரணை கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் சிறுவனின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள சர்வைட் ஆங்கிலப் பள்ளியில் ராஜேந்திரன்-மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இ்ந்த நிலையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவன் பாலமணிகண்டனை கொலை செய்யப்பட்டான். வகுப்பில் அவன் முதல் மாணவனாக வந்ததை பொறுக்காத, காரைக்கால் வேட்டைக்காரன் வீதியை சேர்ந்த சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா தான் காவலாளி மூலம் அந்த குளிர்பானத்தை வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராணி விக்டோரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் மகன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை மனுவை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரிடம் வழங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்