< Back
மாநில செய்திகள்
சிறுவர்கள் சண்டையை சமாதானம் செய்ய முயன்றவர் மீது தாக்குதல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சிறுவர்கள் சண்டையை சமாதானம் செய்ய முயன்றவர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
1 March 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி அருகே சிறுவர்கள் சண்டையை சமாதானம் செய்ய முயன்றவர் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் தீரன்(வயது 13). இவரும் இதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் ராகவன்(14) என்பரும் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த தீரனின் பெரியப்பா மாயக்கண்ணன் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு ராகவன் தந்தை ராஜா மற்றும் இவரது ஆதரவாளர்கள் முகேஷ், திலீப், மண்ணாங்கட்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து பழனிசாமி, மாயக்கண்ணன் ஆகிய இருவரையும் அசிங்கமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாயக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் முகேஷ், மண்ணாங்கட்டி, திலிப், ராஜா ஆகிய 4 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்