< Back
மாநில செய்திகள்
வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்;17 மாணவர்கள் இடை நீக்கம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்;17 மாணவர்கள் இடை நீக்கம்

தினத்தந்தி
|
18 Aug 2023 1:39 AM IST

வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்; 17 மாணவர்கள் இடை நீக்கம்

கும்பகோணம் அரசு கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 மாணவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

17 பேர் இடை நீக்கம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசினர் தன்னாட்சி ஆண்கள் கல்லூரியில் கடந்த 16-ந் தேதி மாணவர்கள் சிலர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் கல்லூரியின் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 17 பேரை வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் இடைநீக்கம் செய்து கல்லூரி ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்