< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டையில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

தினத்தந்தி
|
30 Sept 2023 12:30 AM IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. நீதித்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். கர்நாடகாவில் தமிழக முதல்-அமைச்சரின் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்தும், கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் போராட்டம் நடந்தது. இதில் தலைவர் மலர்வண்ணன், செயலாளர் அரவிந்த்குமார், நூலகர் ஜெய்சங்கரன், நிர்வாகிகள் வேதபிரகாஷ், ராம்பிரசாத், சீனிவாசன், சித்ரா, அனிதா, ரமணன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்