< Back
மாநில செய்திகள்
உத்திரமேரூரில் வாலிபருக்கு பாட்டில் குத்து - கொத்தனார் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

உத்திரமேரூரில் வாலிபருக்கு பாட்டில் குத்து - கொத்தனார் கைது

தினத்தந்தி
|
3 Aug 2023 4:09 PM IST

உத்திரமேரூரில் வாலிபருக்கு பாட்டில் குத்து விழுந்தது. இது தொடர்பாக கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் முத்துகிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (30). கொத்தனார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அப்போது சதீஷ்குமார் டாஸ்மாக்கில் மது வாங்க சென்றார். முத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ் (30) என்பவர் அங்கு இருந்தார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் முருகன் பேசிகொண்டிருந்தார். பீர் பாட்டில் வாங்கி வந்த சதீஷ்குமார் முருகனிடம் வா போகலாம் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது என்னுடன் பேசி கொண்டிருக்கிறவரை எப்படி அழைக்கலாம் என்று சதீஷ்குமாரை யுவராஜ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் யுவராஜ், சதீஷ்குமாரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தன்னுடைய கையில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து யுவராஜின் இடது கைக்கு கீழே குத்தியதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது சம்பந்தமாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்