< Back
மாநில செய்திகள்
சிறுவன் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம்; காரைக்கால் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டம்
மாநில செய்திகள்

சிறுவன் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம்; காரைக்கால் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
10 Sep 2022 2:01 PM GMT

காரைக்காலில் அரசு மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, போலீசாரும், டாக்டர்களும் அலட்சியம் காட்டியதால் தான் மாணவன் உயிரிழந்தான் எனக்கூறி, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் உறவிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து காரைக்கால் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 2 டாக்டர்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டனர். இந்நிலையில் இதனை கண்டித்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கருப்பு பேஜ் அணிந்து ஒரு மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்