விருதுநகர்
வாகனம் மோதி சிறுவன் காயம்
|வாகனம் மோதி சிறுவன் காயம்
சிவகாசி
சிவகாசி ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்தவர் கணேசன் மகன் பாலாஜி (வயது 7). இவர் வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவன் பாலாஜி தனது பாட்டி ராமானுஜம் என்பவருடன் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், சிறுவன் பாலாஜி மீது மோதியது. பின்னர் அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயம் அடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து குறித்து சிறுவனின் தாய் சாந்தி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.