< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
வாகனம் மோதி சிறுவன் படுகாயம்
|6 Oct 2023 12:15 AM IST
வாகனம் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தார்
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் விநாயகர் காலனியை சேர்ந்தவர் விநாயகராஜ் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாணவன் சந்தோஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாணவனின் தந்தை விநாயகராஜ் சிவகாசி டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.