< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பாம்பு கடித்து சிறுவன் சாவு
|9 March 2023 1:18 AM IST
திசையன்விளை அருகே பாம்பு கடித்து சிறுவன் இறந்தான்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தேவ் (வயது 13). நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கிகொண்டு இருந்தபோது அதிகாலை 4 மணியளவில் அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. விழித்து எழுந்த அவன், பெற்றோரிடம் ஏதோ தன்னை கடித்துவிட்டதாக கூறியுள்ளான். பெற்றோர்கள் வீட்டில் தேடியுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் நேற்று காலையில் உடம்பில் வீக்கம் ஏற்பட்டதை கண்ட அவரது பெற்றோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் தேவ் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.