< Back
மாநில செய்திகள்
மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

தினத்தந்தி
|
31 July 2023 12:15 AM IST

தக்கலை அருகே தந்ைத இறந்த ஒரு மாதத்தில் 3 வயது சிறுவன் மர்ம காய்ச்சலில் பரிதாபமாக இறந்தான்.

தக்கலை,

தக்கலை அருகே தந்ைத இறந்த ஒரு மாதத்தில் 3 வயது சிறுவன் மர்ம காய்ச்சலில் பரிதாபமாக இறந்தான்.

கட்டிட தொழிலாளி

தக்கலை அருகே உள்ள வயக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாஜு (வயது38), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி அனிஷா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், சாத்விக் (3¾) என்ற ஒரு மகனும் இருந்தனர். ஷாஜு வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது திடீரென அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஊருக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு புற்றுேநாய் இருந்தது தெரிய வந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் ஷாஜு பரிதாபமாக இறந்தார்.

அவர் இறந்த 15-வது நாளில் இளையமகன் சாத்விக் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். சிறுவனை கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் சிகிச்சை செலவுக்காக லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக தெரிகிறது.

பரிதாப சாவு

இதையடுத்து தாயார் அனிஷா பலரிடம் உதவி ேகட்டு பணத்தை திரட்டி கட்டினார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுவன் சாத்விக் பரிதாபமாக இறந்தான். கணவரை இழந்த ஒரு மாதத்தில் மகனையும் இழந்த அனிஷா கதறி அழுதது காண்பவர் ெநஞ்சை கரைக்கும் வண்ணம் இருந்தது.

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்