< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
|19 May 2024 10:37 PM IST
விளையாடிக் கொண்டிருந்தபோது, மின் கம்பியை தொட்டதால் சிறுவன் உடல் கருகி உயிரிழந்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட்டிக்குப்பம் ராஜன் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மின் கம்பியை தொட்டதால் சிறுவன் கிஷோர் ராகவ் (12 வயது) உடல் கருகி உயிரிழந்தார்.
மேலும், மின்சாரம் தாக்கிய மற்றொரு சிறுவன் கிருத்விக், ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.