< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் சாவு

தினத்தந்தி
|
25 May 2023 2:23 PM IST

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 39). இவர் திருநின்றவூர் பகுதியில் ரேஷன் கடை விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். புதூர் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த பூண்டி ஒன்றியம் எல்லப்பநாயுடு பேட்டை ஊராட்சி புதூர் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் (வயது 17) மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் யுவராஜ், விநாயகம் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு யுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விநாயகம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். யுவராஜ் தற்போது நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்