< Back
மாநில செய்திகள்
ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி

தினத்தந்தி
|
21 Jun 2023 1:38 AM IST

சேதுபாவாசத்திரம் அருகே ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

சேதுபாவாசத்திரம் அருகே ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

விபத்து

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள துறையூர் கிராமத்தை சேர்ந்த முத்துராமன் மகன் அருள்முருகன் (வயது16). 10-ம் வகுப்பு முடித்து விட்டு 11-ம் வகுப்பில் சேருவதற்காக காத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் துறையூரிலிருந்து வீட்டுக்கு சாமான்கள் வாங்குவதற்காக சேதுபாவாசத்திரம் கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

எதிரே சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த நைனாமுகமது பேராவூரணி நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். சேதுபாவாசத்திரம் அருகே பேராவூரணி சாலையில் ெசன்றபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அருள்முருகன் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தார்.

போலீசார் விசாரணை

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிறுவன் பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்