< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் கோர்ட்டில் சிறுவன் சரண்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் கோர்ட்டில் சிறுவன் சரண்

தினத்தந்தி
|
24 Aug 2023 12:15 AM IST

நெல்லிக்குப்பம் அருகே நடந்த ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவன் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தான்.

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முகிலன்(வயது 28). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 18-ந் தேதி இரவு இவர், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த பாலூர் சித்தரசூர் காலனி பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று முகிலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் நேற்று விழுப்புரத்தில் உள்ள இளம்சிறார் நீதிமன்றத்தில் சரணடைந்தான். இதையடுத்து அவன், விழுப்புரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

மேலும் செய்திகள்