< Back
மாநில செய்திகள்
காங்கிரஸ் கொடிக்கம்பத்தை அவமதித்த சிறுவன் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

காங்கிரஸ் கொடிக்கம்பத்தை அவமதித்த சிறுவன் கைது

தினத்தந்தி
|
27 Sept 2023 2:15 AM IST

கோட்டூரில் காங்கிரஸ் கொடிக்கம்பத்தை அவமதித்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கோட்டூர் மதுரை வீரன் கோவில் அருகே காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பம் நேற்று முன்தினம் அவமதிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பவத்தன்று அந்த பகுதியில் சிறுவர்கள் தகராறு செய்து கொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் 17 வயது சிறுவன் காங்கிரஸ் கொடிக்கம்பத்தை அவமதித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்